உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் வரலாற்றின் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
அயோத்தி தீர்ப்பு எதிரொலி: ஜம்மு-காஷ்மீரில் 144 தடை உத்தரவு! - ஜம்மு காஷ்மீரில் 144 தடை
ஸ்ரீநகர்: அயோத்தி வழக்கு தீர்ப்பு எதிரொலியாக ஜம்மு-காஷ்மீரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு அயோத்தி வழக்கு குறித்து உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பை வாசித்தது. அதில், அயோத்தியின் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம் எனவும் அதேபோன்று இஸ்லாமியர்கள் மசூதி கட்டுவதற்காகல தகுந்த இடத்தில் ஐந்து ஏக்கர் மாற்று நிலத்தை வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவினைத் தொடர்ந்து, ஜம்மு- காஷ்மீரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு இடங்களிலும் கூடுதல் ராணுவத்தினர் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சாலைகளில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.