உலகளவில் பெருந்தொற்றாக அறிவிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாக்க இந்தியா பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. மத்திய அரசும், மாநில அரசும் மக்களிடம் வைரஸ் குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்திவருகின்றன.
இந்தியாவில் வேகமாகப் பரவிக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு மாநிலங்களில் கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
லடாக் பகுதியில் இதுவரை மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து, லடாக்கின் கார்கில் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது. குறிப்பாக பொது இடங்களில் ஐந்து நபர்களுக்கு அதிகமானோர் கூடக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த 144 தடை உத்தரவு ஒரு மாத காலம் செயல்பாட்டில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் 120 பேர் பாதிப்படைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கர்நாடகாவில் கொரோனா: மேலும் இருவருக்கு உறுதி