மேற்கு வங்கம் மாநிலம், வர்தமான் மாவட்டத்தில் இந்தியாவின் இரண்டாவது பெரிய மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. இந்த மேம்பால பணிகளை ரூ.300 கோடியில் இந்திய ரயில்வே துறையும், மாநில அரசும் இணைந்து மேற்கொண்டு வந்தது. தற்போது பாலத்தின் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து திறப்பதற்கு தாயார் நிலையில் உள்ளது.
இந்தியாவின் இரண்டாவது பெரிய மேம்பாலம் விரைவில் திறப்பு - second-largest bridge inauguration
கொல்கத்தா: வர்தமான் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் இரண்டாவது பெரிய மேம்பாலத்தை மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் செப்டம்பர் 30ஆம் தேதி திறந்து வைக்கிறார்.
வர்தமான் மேம்பாலம்
நாட்டின் இரண்டாவது பெரிய மேம்பாலமாக கருதப்படும் இப்பாலத்தை 197 நாட்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும், போக்குவரத்தை பாதிக்காத வகையில் கட்டப்பட்டுள்ளதாகவும் அலுவலர்கள் தெரிவித்தனர்.
மேலும் இம்மேம்பாலம் வரும் 30ம் தேதியன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் திறந்து வைக்கிறார்.