குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. இதனையொட்டி கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இந்திய மஜ்லிஸ்-இ-
அப்போது அக்கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான ஓவைசி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். போராட்டத்தில் அமுல்யா என்ற மாணவி பாகிஸ்தானுக்கு ஆதராவாகத் திடீரென்று 'பாகிஸ்தான் நீடூழி வாழ்க' (பாகிஸ்தான் ஜிந்தாபாத்) என்று கோஷம் எழுப்பினார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. தொடர்ந்து மாணவியின் இந்தச் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஓவைசி அவர் எதிரி நாட்டை புகழ்வது சரி அல்ல எனத் தெரிவித்தார். அதையடுத்து அந்த மாணவி தேச துரோக வழக்கில் கைதும் செய்யப்பட்டார்.