உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் தன்னிடமிருந்து விவாகரத்து பெற்ற மனைவிக்கு ஜீவனாம்சம் (வாழ்க்கைப்படி) தர இயலாது என அலகாபாத் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பிரதீப் குமார் ஸ்ரீவஸ்தவ், "குற்றவியல் நடைமுறைச் சட்டம் 125 ஒரு சமூகம் சார்ந்ததோ, மதம் சார்ந்ததோ அல்ல. நாட்டில் நிறைவேற்றப்பட்ட மதச்சார்பற்ற சட்டங்களில் ஒன்று" என்றார்.
உச்ச நீதிமன்றத்தின் பல தீர்ப்புகளை மேற்கோள்காட்டிய நீதிமன்றம், "விவாகரத்து பெற்ற இஸ்லாமிய பெண்களுக்கு ஆதரவாக இருக்கும் வகையில் ஜீவனாம்சம் வழங்கப்பட்டுவருகிறது. வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும் ஜீவனாம்சம், குறிப்பிட்ட பெண் மறுமணம் செய்தால் மட்டும் நிராகரிக்கப்படும்.