பிகார் மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர்-நவம்பர் மாத காலகட்டத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் சில நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அங்குள்ள 243 தொகுதிகளில் போட்டியிட தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது.
அங்கு, மதசார்பற்ற ஜனதாதளத்தின் தலைவர் நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடத்திவருகிறது. வரும் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மதசார்பற்ற ஜனதாதளம் பாஜக, லோக் ஜனசக்தி, ஆர்.எல்.எஸ்.பி., ஜிதின்ராம் மஞ்சியின் எஃச்.ஏ.எம். ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.