உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரின் உள்ளூர் ரவுடியான விகாஸ் துபே என்பவரை காவல் துறையினர் கைது செய்ய முயன்றபோது, துபேவின் ஆட்கள் காவல் துறையினர் மீது நடத்திய தாக்குதலில் காவல் துறை துணை கண்காணிப்பாளர் உள்பட எட்டு காவலர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த கொலைவெறித் தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
துபேவின் கூட்டாளிகளை தேடும் காவல்துறை! - யார் இந்த விகாஸ் துபே
லக்னோ: தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள விகாஸ் துபேவின் கூட்டாளிகள் குறித்து தகவல் தெரிந்தால், உடனடியாக காவல்துறையை அணுகுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, விகாஸ் துபேவை மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் காவல் துறையினர் கைதுசெய்தனர். இதைத்தொடர்ந்து, அவரது கூட்டாளிகள் ஐந்து பேரை காவல்துறையினர் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர். இந்நிலையில், அவரது கூட்டாளிகளில் மீதமுள்ள நபர்களை உத்தரப் பிரதேச காவல்துறையினர் கான்பூரில் உள்ள ஹோட்டல், விடுதிகளில் வலைவீசி தேடி வருகின்றனர்.
தேடப்படும் குற்றவாளிகளின் புகைப்படங்களையும் போஸ்டர்களையும் காவல்துறையினர் ஒட்டியுள்ளனர். அதில், குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கும்படி குறிப்பிடப்பட்டுள்ளது.