நாட்டின் முதல் கடல் விமான சேவையை பிரமதர் நரேந்திர மோடி வரும் 31ஆம் தேதி குஜராத்தில் தொடங்கிவைக்கிறார். நாட்டின் முதல் கடல் விமானம் லிபர்ட்டி சிலையிலிருந்து (Statue of Liberty) சபர்மதி வரை பறக்கவிருக்கிறது.
தனியார் விமான நிறுவனமான 'ஸ்பைஸ்ஜெட்' நாட்டில் கடல் விமான சேவையைத் தொடங்குவதற்கான அனுமதியை பெற்றுள்ளது. ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் மாலத்தீவில் இருந்து கடல் விமானத்தை குஜராத் மாநிலம் கொண்டுவந்து தனது சேவையை தொடங்குகிறது. அதன் அடிப்படையில், " ஸ்பைஸ்ஜெட் டெக்னிக் டிவின் ஒட்டர் 300 விமானம் மாலத்தீவின் மாலி நகரிலிருந்து புறப்பட்டு, தொழில்நுட்ப நிறுத்தத்திற்காக நேற்று(அக்.25) கொச்சியில் உள்ள வெண்டுருதி சேனலுக்குள் வெற்றிகரமாக தரையிறங்கியது.