அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆற்றங்கரையை கெவாடியாவில் உள்ள சிலையுடன் இணைக்கும் கடல் விமானம் அகமதாபாத்தை வந்தடைந்தது. இந்தக் கடல் விமானம் மாலத்தீவிலிருந்து புறப்பட்டு கோவாவில் நிறுத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று குஜராத் வந்தடைந்தது.
அக்டோபர் 31ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி இந்தக் கடல் விமானத்தை தொடங்கிவைக்கவுள்ளார். முதல் விமானம் அகமதாபாத் ஆற்றங்கரையிலிருந்து அக்டோபர் 31 காலை 8 மணிக்கு புறப்படும். அகமதாபாத் முதல் கெவாடியா வரை 220 கி.மீ. தூரத்தை 45 நிமிடங்களுக்குள் வந்தடையும். இந்தக் கடல் விமானம் 19 இருக்கைகளைக் கொண்டுள்ளது. இது 300 மீட்டர் நீளமுள்ள ஓடு பாதையிலிருந்து புறப்படும்.