கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ராஜஸ்தானின் ஜோத்பூரில், மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் வழக்கம் போல் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சதார் பசார் காவல் நிலைய பகுதியில் வீட்டை விட்டு வெளியே வந்து தெருவில் அமர்ந்திருந்த வயதான நபர் ஒருவரை, வீட்டிற்கு செல்லுமாறு மாநில பேரிடர் மீட்புக் குழு வீரர் ஒருவர் கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து, அந்த வீரர் மீது அடையாளம் தெரியாத இருவர் கற்கள் வீசி தாக்குதல் நடத்தினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தாக்குதலில் ஈடுபட்ட இருவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
பின்னர் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், தாக்குதலுக்கு ஆளான வீரரின் பெயர் ராம்கேஷ் என்பது தெரியவந்தது. இவர் அருகே உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். இனி இதுபோன்று தாக்குததில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் காவல் உதவி ஆணையர் தர்மேந்திர யாதவ் எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க:அனைத்து செய்தியாளர்களுக்கும் கரோனா சோதனை - டெல்லி முதலமைச்சர்