2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த சியாமபிரசாத் அடையாளம் தெரியாத நபர்களால் கொலைசெய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் சலாவுதீன் என்பவர் ஏழாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்தார்.
இதனால் சியாமபிரசாத் கொலையான ஒரு வருடத்திற்கும் மேலாக சலாவுதீன் தலைமறைவாக இருந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் காவல் துறையினரிடம் சலாவுதீன் சரணடைந்தார்.
இந்நிலையில் சில நாள்களுக்கு முன்னதாக சலாவுதீன் சிறையிலிருந்து வெளிவந்திருந்த நிலையில், நேற்று தனது குடும்பத்தினருடன் காரில் வெளியே சென்றுள்ளார். அப்போது திடீரென இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் காரை வழிமறித்துள்ளனர்.