தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ரஷ்ய பயணத்தில் சீன அமைச்சரை சந்திக்கிறாரா ராஜ்நாத் சிங்? - காவ்காஸ் 20

மாஸ்கோ: ரஷ்யா சென்றுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சீன பாதுகாப்பு துறை அமைச்சரை சந்திக்க இருப்பதாக வெளியான தகவல்களை பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் முற்றிலும் மறுத்துள்ளன.

Rajnath Singh
Rajnath Singh

By

Published : Sep 2, 2020, 2:57 PM IST

ரஷ்யாவில் வரும் செப்டம்பர் 4ஆம் தேதி நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்தில் கலந்துகொள்ள மூன்று நாள் பயணமாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (செப்.02) ரஷ்யா புறப்பட்டுச் சென்றார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் வரும் செப்டம்பர் 4ஆம் தேதி கலந்துகொள்ளும் ராஜ்நாத் சிங், அதன் பின் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோயுக் மற்றும் பல உயர் ராணுவ அலுவலர்களுடன் ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அதைத்தொடர்ந்து செப்டம்பர் 5ஆம் தேதி மாலை ராஜ்நாத் சிங் இந்தியா திரும்புகிறார். வரும் செப்டம்பர் 15 முதல் 27ஆம் தேதி வரை ரஷ்யா சார்பில் நடத்தப்படும் சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பங்கேற்கும் 'காவ்காஸ் 20' போர் ஒத்திகைப் பயிற்சியிலிருந்து விலகுவதாக இந்தியா அறிவித்துள்ள நிலையில், ராஜ்நாத் சிங்கின் ரஷ்யா பயணம் அமைந்துள்ளது.

மேலும், இந்திய-சீன எல்லைப் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. கல்வான் மோதலுக்கு பின், படைகளை திரும்பபெறும் நடவடிக்கை குறித்து இரு நாட்டு ராணுவ உயர் அலுவலர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்தச் சூழலில் ஆகஸ்ட் 30ஆம் தேதி இந்திய எல்லைப் பகுதியில் சீன ராணுவம் ஊடுருவ முயன்றதாகவும் அதை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்ததாகவும் பாதுகாப்புத் துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டிருந்தது. இது எல்லையில் இருக்கும் சூழலை மேலும் மோசமாக்கும் வகையில் அமைந்துள்ளது.

மூன்று நாள் பயணமாக ரஷ்யா புறப்பட்டுச் சென்ற பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

இந்நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் கலந்துகொள்ளும் சீன பாதுகாப்பு துறை அமைச்சர் ஜெனரல் வீ ஃபெங்கை ராஜ்நாத் சிங் சந்தித்து ஆலோசனை நடத்துவார் என்ற செய்திகள் வெளியாயின. ஆனால், அவ்வாறு எவ்வித திட்டமும் இல்லை என்று பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளன.‘

இதையும் படிங்க: சீனா, பாகிஸ்தான் பங்கேற்கும் 'காவ்காஸ் 20' போர் ஒத்திகை பயிற்சியில் இருந்து விலகிய இந்தியா!

ABOUT THE AUTHOR

...view details