தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா வைரஸை அழிக்க கருவி கண்டுபிடிப்பு! - அமெரிக்காவின் ஹவ்ஸ்டீன் பல்கலைக்கழகம்

டெல்லி: கரோனா வைரஸ் கோவிட்-19யை அழிக்க புதிய கருவி கண்டுப்பிடிக்கப்பட்டு உள்ளது.

கரோனா வைரஸை அழிக்க கருவி கண்டுபிடிப்பு!
கரோனா வைரஸை அழிக்க கருவி கண்டுபிடிப்பு!

By

Published : Jul 12, 2020, 2:24 AM IST

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் எட்டு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இருந்தபோதிலும் கரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதுமட்டுமின்றி மருந்துகள், தடுப்பூசிகள் கண்டுப்பிடிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கரோனா வைரஸான கோவிட்-19யை அழிக்க புதிய கருவி ஒன்றினை அமெரிக்காவின் ஹவ்ஸ்டீன் பல்கலைக்கழக டெக்சஸ் ஆராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.

இதன் மூலம், காற்றை வடிகட்டி, வைரஸை கண்டறிந்து அழிக்க முடியும். காற்றை வடிக்கட்டும் இந்த கருவியை விமான நிலையங்கள், அலுவலக கட்டடங்கள், பள்ளிகள் ஆகியவற்றில் வைத்து கரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும்.

இது குறித்து டெக்சஸ் மையத்தின் இயக்குநர் ஜிஃபெங் ரென் கூறுகையில், “இந்த வடிப்பானின் பயன் சமுதாயத்திற்கு மிக முக்கியம். இதன் மூலம் அலுவலகங்கள், பள்ளி, கல்லூரி கட்டடங்களில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தலாம்” என்றார்.

இதையும் படிங்க...தமிழர்களின் கைவண்ணத்தில் உருவாகும் தெலங்கானா தலைமைச் செயலகம்!

ABOUT THE AUTHOR

...view details