தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரி சுகாதாரத் துறையுடன் விஞ்ஞானிகள் ஆலோசனை!

புதுச்சேரி: கரோனா வைரஸ் நோய்த்தடுப்பு பணிகள் குறித்து விஞ்ஞானிகள் புதுச்சேரி சுகாதாரத்துறையுடன் ஆலோசனை நடத்தினார்கள்.

Scientists consulted with Puducherry Health Department
Scientists consulted with Puducherry Health Department

By

Published : Aug 27, 2020, 3:17 PM IST

புதுச்சேரியில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் பணிகளை மேலும் வலுப்படுத்துவதற்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் (Indian Council of Medical Research) ஒரு அங்கமான சென்னை, தேசிய தொற்றுநோயியல் நிலையத்தின் (National Institute of Epidemiology – NIE, Chennai) இயக்குநர் விஞ்ஞானி Dr. மனோஜ் மற்றும் மர்க்கேகர் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு புதுச்சேரி வந்தனர்.

இக்குழுவினர் நேற்று (ஆக.26) புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவை சந்தித்துப் பேசினார்கள்.

இக்குழுவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கணேஷ்குமார், நேசன், மாவட்ட ஆட்சியர், சுகாதாரத்துறைச் செயலர் அருண், இயக்குநர் Dr. மோகன்குமார், இந்தியமுறை மருத்துவம், ஹோமியோபதி துறை இயக்குநர் Dr. ஸ்ரீராமுலு மற்றும் அலுவலர்கள் பலரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

புதுச்சேரி மாநிலத்தில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பை மதிப்பீடு செய்து இதன் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கான ஆலோசனைகள் நடத்தப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details