தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஒலிம்பியாட் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த தேர்வுக்குழு முடிவு! - கரோனா அச்சம்

ஹைதராபாத்: மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நடப்பாண்டின் ஒலிம்பியாட் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும் என அறிவியல் ஒலிம்பியாட் அறக்கட்டளை இயக்குநர் மகாபீர் சிங் தெரிவித்துள்ளார்.

oly
ly

By

Published : Oct 26, 2020, 4:57 PM IST

நாடு முழுவதும் கரோனா தொற்று அச்சம் உள்ளதால், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்தாண்டு நடைபெறும் ஒலிம்பியாட் தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறும் என அறிவியல் ஒலிம்பியாட் அறக்கட்டளை இயக்குநர் மகாபீர் சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "இந்த தேர்வுகளில் வழிகாட்டுதல் பின்பற்றுவதை உறுதிப்படுத்த ரிமோட் ப்ரொக்டரிங், செயற்கை நுண்ணறிவு, தேர்வுகளின் வீடியோ பதிவு உள்ளிட்ட பலவற்றை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு வகுப்பில் வெற்றிபெறும் மாணவர்களுக்கும், மாநில மற்றும் சர்வதேச மட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் பரிசுகள், விருதுகள் மற்றும் உதவித்தொகை வழங்கப்படும்" என்றார்.

கிடைத்த தகவலின்படி, மாணவர்களின் ரோல் எண், தேர்வுகளுக்கான லிங்க், வழிகாட்டுதல்கள் மற்றும் பிற முக்கிய தகவல்கள், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் குறுஞ்செய்தி வழியாக அனுப்பப்படும். இத்தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் மற்றும் பள்ளிகளுக்கு தனித்தனியே லிங்க் வழங்கப்பட்டுள்ளன.

பள்ளி - https://ors.sofworld.org/

மாணவர்கள் - https://ors.sofworld.org/studentregistration

ABOUT THE AUTHOR

...view details