தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பள்ளிகளை தயார்படுத்தும் பணிகள் தீவிரம்! - பள்ளிகள்

புதுச்சேரி: வரும் 8 ஆம் தேதி முதல் பள்ளிகள் இயங்கும் என அரசு அறிவித்துள்ள நிலையில், பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணிகள் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

ready
ready

By

Published : Oct 5, 2020, 1:29 PM IST

புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் 8 ஆம் தேதி முதல் தொடங்கும் என புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதையடுத்து, இன்று முதல் 7 ஆம் தேதி வரை பள்ளி வகுப்பறைகள் தூய்மைப்படுத்தப்பட்டு தயார்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன. மேலும், தனி மனித இடைவெளியுடன் இருக்கைகள் அமைத்தல், கிருமி நாசினி தெளித்தல், மாணவர்களுக்கு கிருமி நாசினி வழங்குதல் ஆகியவற்றிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

மேலும், 9,10,11,12 ஆம் வகுப்பு மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள 8 ஆம் தேதி முதல் பள்ளிக்கு வரலாம் என தெரிவித்துள்ள கல்வித்துறை, திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் 9, 11 ஆம் வகுப்புகளுக்கும், செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் 10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், காலை 10 முதல் நண்பகல் ஒரு மணி வரை மட்டும் வகுப்புகள் நடத்தப்படும் என்று கூறியுள்ளது. மேலும், வருகைப் பதிவேடு இல்லாததால், விருப்பத்தின் பேரில் பெற்றோர் அனுமதியுடன் மாணவர்கள் பள்ளிக்கு வரலாம். இதற்காக பள்ளியில் விண்ணப்பப்படிவம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளை தயார்படுத்தும் பணிகள் தீவிரம்!

மாணவர்களுக்கோ, ஆசிரியர்களுக்கோ, அவர்தம் குடும்பத்தினருக்கோ கரோனா பாதிப்பு அறிகுறி இருந்தால் அவர்கள் பள்ளிக்கு வரக்கூடாது. தனியார் பள்ளிகள் முழுநேரம் பள்ளி நடத்த அனுமதி கிடையாது. விதிகளை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதற்கிடையே அரசு பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணியில் மாநிலம் முழுவதும் இன்று பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: அதிகரிக்கும் கரோனா பரிசோதனைகள்: சென்னை நிலவரம்?

ABOUT THE AUTHOR

...view details