தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மாணவர்களுக்கு பாடங்களில் எழும் சந்தேகங்கள் - நிவர்த்தி செய்ய மட்டும் பள்ளிகள் திறக்கப்படும்! - Puducherry Education director

பாடங்களில் மாணவர்களுக்கு எழும் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய மட்டுமே பள்ளிகள் திறக்கப்படும் என, புதுச்சேரி கல்வித்துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

புதுச்சேரியில் சந்தேக வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும் !
புதுச்சேரியில் சந்தேக வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும் !

By

Published : Oct 2, 2020, 7:12 PM IST

புதுச்சேரி :பாடங்களில் மாணவர்களுக்கு எழும் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய மட்டுமே பள்ளிகள் திறக்கப்படும் என, புதுச்சேரி கல்வித்துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ருத்ர கவுடு செய்தியாளர்களிடம் கூறுகையில், "புதுச்சேரி, காரைக்காலில் வரும் 5ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும். பாடங்களில் ஏதேனும் சந்தேகங்கள் எழுந்தால், அது தொடர்பாக மாணவர்களுக்கான வகுப்புகள் அக்டோபர் 8ஆம் தேதி முதல் நடைபெறும்.

திங்கள் - சனி கிழமை வரை வகுப்புகள் நடைபெறும். அதாவது, பத்தாம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு வாரத்தின் முதல் மூன்று நாள்களும், 9, 11ஆம் வகுப்புகளுக்கு அடுத்த 3 நாள்களும் வகுப்புகள் எடுக்கப்படும். காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் இந்த வகுப்புகளுக்கு வரும் மாணவர்களுக்கு வருகைப்பதிவேடு எடுக்கப்படாது. பெற்றோர் சம்மதத்துடன் மட்டுமே மாணவர்கள் பள்ளிகளுக்கு வர வேண்டும்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details