தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கர்நாடகாவில் பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை - முதலமைச்சர் எடியூரப்பா - school reamin closed

பெங்களூர்: கர்நாடகாவில் பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை, ஆனால், அரசு அறிவுறுத்தலின்படி ஆன்லைன் வகுப்புகள் தொடரும் என்று முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்தார்.

ediyurappa
ediyurappa

By

Published : Nov 23, 2020, 4:39 PM IST

கரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் வாழ்வாதாரத்தை மீட்க ஊரடங்கு தளர்வுகள் அறிவித்த போதிலும், பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படவில்லை. இதனிடையே, கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடித்து பள்ளி, கல்லூரிகள் திறக்க மத்திய அரசு அனுமதியளித்தது. அதன்படி சில மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன.

நவம்பர் 17ஆம் தேதி கர்நாடகாவில் கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் கல்லூரிகள் திறக்கப்பட்டன. இதனால், ஆசிரியர்கள் மாணவர்கள், ஊழியர்கள் கரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழைச் சமர்ப்பித்தனர். இருப்பினும், கல்லூரிகள் திறந்த ஒரு வாரத்திலேயே 130-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், முதலமைச்சர் எடியூரப்பா கூறுகையில், "சுகாதாரத் துறை அலுவலர்கள், பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்கள், கல்வி வல்லுநர்களிடம் ஆலோசித்த பிறகே முடிவெடுக்கப்படும். இது தொடர்பாக டிசம்பர் மாதம் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும்.

கர்நாடகாவில் பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை. அதபோன்று ஆன்லைன் வகுப்புகளும் தொடரும்" என்றார்.

முன்னதாக தொற்று எண்ணிக்கை அதிகரித்தால் கல்லூரிகள் மூடப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் கே. சுதாகர் கூறியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கேரளாவில் தற்போது சட்டப்பிரிவு 118ஏ அமல்படுத்தப்படாது: பினராயி அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details