புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் 35க்கும் மேற்பட்ட அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் பணிபுரியும் 600க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு புதுச்சேரி அரசு சென்ற ஏழு மாத ஊதியத் தொகையை நிலுவையில் வைத்துள்ளது.
இந்நிலையில் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் சார்பில் காரைக்கால் புதிய பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். இதில், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கவேண்டிய ஊதியத்தை புதுச்சேரி அரசு உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.