சர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்து ஜூலை 15ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேவேளை சர்வதேச சரக்கு போக்குவரத்து விமானங்கள் வழக்கம்போல் இயக்கப்படும் எனவும் வந்தே பாரத் சிறப்பு விமானங்கள் போன்ற அரசின் வழிகாட்டுதலின்படி இயங்கும் பயணிகள் விமானப் போக்குவரத்தும் இயங்கும் எனவும் தெரிவித்துள்ளது.
சர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்து ஜூலை 15 வரை ரத்து
circular
17:02 June 26
வந்தே பாரத் சிறப்பு விமானப் போக்குவரத்துத் திட்டம் மூலம் இதுவரை 5.13 லட்சம் பயணிகள் நாடு திரும்ப விண்ணப்பித்துள்ளதாகவும், அதில் 3.64 லட்சம் பயணிகள் நாடு திரும்பியுள்ளதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:'மோடியின் அரசியல் கரோனாவை விட ஆபத்தானது' - சிவசேனா
Last Updated : Jun 26, 2020, 5:56 PM IST
TAGGED:
civil aviation ministry