கல்புர்கி (பெங்களூரு): கர்நாடக மாநிலம் கல்புர்கி மாவட்டம் சித்தாபூர் தாலுகா, கல்லூர் கிராமத்தில் உள்ள மருத்துவமனையில் மின்சார விநியோகம் பாதியில் தடைப்பட்ட நிலையில் இளம்பெண்ணுக்கு மருத்துவர் செல்போன் வெளிச்சத்தில் பிரசவம் பார்த்துள்ளார்.
பிரசவ வலியால் துடித்த அந்தப் இளம்பெண்ணின் பெயர் சித்தம்மா. நிறைமாத கர்ப்பிணியான இவர், செவ்வாய்க்கிழமை (நவ.10) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு புதன்கிழமை பிரசவ வலி ஏற்பட்ட நிலையில், திடீரென மின்சாரம் பாதியில் நின்றது. இதனால் மருத்துவர்கள் வேறு வழியின்றி டார்ச் லைட் மற்றும் செல்போன் ஒளியில் பிரசவம் பார்த்தனர். அப்பெண்ணுக்கு அழகிய ஆண்குழந்தை பிறந்தது. தற்போது தாயும்- சேயும் நலமுடன் உள்ளனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் அவசர வசதிக்காக இன்வெர்ட்டர் வசதி செய்து கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், செல்போன் ஒளியில் பிரசவம் பார்த்த மருத்துவர் மற்றும் மருத்துவ ஊழியர்களை வெகுவாக பாராட்டினார்கள்.
இதையும் படிங்க: ஆம்புலன்ஸில் இளம் பெண்ணுக்கு பிரசவம் - மருத்துவ உதவியாளர், பைலட்டுக்குப் பாராட்டு தெரிவித்த மக்கள்!