தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

எஸ்.சி/எஸ்.டி சட்டம்; உச்ச நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு! - Sc/St Act judgement

டெல்லி: எஸ்.சி/எஸ்.டி சட்டம் குறித்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தது, இதன் மீதான தீர்ப்பு இன்று வெளியாகிறது.

SC

By

Published : Oct 1, 2019, 9:59 AM IST

தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆகியோருக்கு எதிராக நடக்கும் வன்முறைகளைத் தடுக்கும் விதமாக வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தின் கடுமையான பிரிவுகளான குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரணை இன்றி கைது செய்தலுக்கு தடை விதித்தும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு முன்பிணை வழங்கும் திருத்தத்தை அறிமுகப்படுத்தியும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பால் சட்டம் நீர்த்து போய்விடும் எனக்கூறி பல அரசியல் கட்சிகள் நாடு முழுவதும் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் போராட்டத்தில் இறங்கியது. பதற்றம் நிலவியதைத் தொடர்ந்து, தீர்ப்பை மறுசீராய்வு செய்ய மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இதன் மீதான தீர்ப்பு இன்று வெளியாகிறது. இந்த தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details