தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'பாஜக அரசின் வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்திய ரஃபேல் தீர்ப்பு' - ரஃபேல் விவாகரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம்

டெல்லி: ரஃபேல் விவகாரத்தில் வெளியான தீர்ப்பு எங்கள் அரசின் வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்தியுள்ளது என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

Rajnath

By

Published : Nov 14, 2019, 3:15 PM IST

Updated : Nov 16, 2019, 8:22 AM IST

ரஃபேல் விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் அந்த ஒப்பந்தத்தில் எந்தவொரு முறைகேடும் நடைபெறவில்லை எனத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்தத் தீர்ப்பு குறித்து ராஜ்நாத் சிங், "ரஃபேல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நான் வரவேற்கிறேன். தேசிய ஜனநாயகக் கூட்டணி கொள்கை நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. எங்கள் அரசு எடுக்கும் அனைத்து முடிவுகளும் வெளிப்படைத்தன்மை வாய்ந்தவை என்பதை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு உறுதிப்படுத்தியுள்ளது" எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ரஃபேல் வழக்கில் சீராய்வு மனுக்கள் தள்ளுபடி

Last Updated : Nov 16, 2019, 8:22 AM IST

ABOUT THE AUTHOR

...view details