கேரள மாநிலம் திருவனந்தபுரம் உள்ள பத்மநாப சுவாமி கோயில் நிர்வாகம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று (ஜூலை 13ஆம் தேதி) வழங்கியது.
அந்தத் தீர்ப்பில், “கோயில் நிர்வாக உரிமை பாரம்பரிய முறைப்படி திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் அரச குடும்பத்தை சேரும். என்னும் திருவனந்தபுரம் மாவட்ட நீதிபதி தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் மேற்பார்வையிடுவார்கள்” என கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, கேரள அரசு சார்பில் அறக்கட்டளை அமைத்து ஆலய நிர்வாகத்தை மேற்கொள்ள வேண்டும் என கடந்த 2011ஆம் ஆண்டு கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதைத் தொடர்ந்து வழக்கின் தீர்ப்புக்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்ட நிலையில், ஒன்பது ஆண்டுகளுக்குப்பின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.