ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி உயர் நீதிமன்றத்தில் பணியாற்றிய இரண்டு சட்ட அலுவலர்கள் (அருண் குமார் குப்தா, ராஜ் நந்தன் ராய்) மீது பெண்கள் பாலியல் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சட்ட அலுவலர்கள் இருவருக்கும் கட்டாய ஓய்வு அளித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து அவர்கள் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனுக்களை நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், தீபக் குப்தா ஆகியோர் நேற்று தள்ளுபடி செய்தனர்.
மேலும் நீதிபதிகள் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதிப்படுத்தினர். ஆக இனிவரும் காலங்களில் சட்ட அலுவலர்கள் மீது 10க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் புகார் அளிக்கும்பட்சத்தில் அவருக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்படும்.