தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் குற்றவாளி!

Supreme Court SC to verdict in Prashant Bhushan contempt case Prashant Bhushan contempt case நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பிரசாந்த் பூஷண் குற்றவாளி
Supreme Court SC to verdict in Prashant Bhushan contempt case Prashant Bhushan contempt case நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பிரசாந்த் பூஷண் குற்றவாளி

By

Published : Aug 14, 2020, 11:26 AM IST

Updated : Aug 14, 2020, 12:27 PM IST

11:22 August 14

டெல்லி: உச்ச நீதிமன்றம் மற்றும் தலைமை நீதிபதி ஆகியோருக்கு எதிராக ஆட்சேபத்துக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் ஜூன் 27 மற்றும் 29ஆம் தேதிகளில் இரண்டு ட்வீட் செய்திருந்தார். அந்த ட்வீட்கள் நீதித்துறை மற்றும் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே ஆகியோரை இழிவுப்படுத்துவதாக குற்றஞ்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, இது தொடர்பாக மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷணுக்கு எதிராக தானே முன்வந்து உச்ச நீதிமன்றம்  நீதிமன்ற அவமதிப்பு வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கை நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய மூன்று பேர் கொண்ட அமர்வு விசாரணை நடத்தியது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கை ஆகஸ்ட்14ஆம் தேதிக்கு (அதாவது இன்று) ஒத்திவைத்தனர். இந்நிலையில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என தீர்ப்பளித்தனர். மேலும், தண்டனை விவரம் வருகிற 20ஆம் தேதி தெரிவிக்கப்படும் என்றும் அறிவித்தனர்.

இதையும் படிங்க:பட்டியலினத்தவர்களுக்கு எதிராக அட்டூழியங்கள் அதிகரிப்பு - பிரசாந்த் பூஷண் பாய்ச்சல்

Last Updated : Aug 14, 2020, 12:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details