இந்திய ஆரசு பிரான்ஸ் நாட்டுடன் செய்த ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, பிரசாந்த் பூஷன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.
ரஃபேல் வழக்கு குறித்து உச்ச நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு - உச்சநீதிமன்றம்
டெல்லி: ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக யஷ்வந்த் சின்ஹா, பிரசாந்த் பூஷண், அருண் ஷோரி ஆகியோர் தாக்கல் செய்த மறுசீராய்வு ஆய்வு மனுவிற்கான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று வழங்கவுள்ளது.
இது தொடர்பாக சந்தேகத்திற்கான முகாந்திரம் ஏதும் இல்லை என்று கூறி மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், மனுதாரர்கள் சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் அரசு உச்ச நீதிமன்றத்தில் தவறான தகவலைக் கூறியதாகக் குற்றம்சாட்டி சில ஆவணங்களை முன்வைத்தனர்.
இது குறித்து ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் கே.கே.வேனுகோபால், 'தேசியப் பாதுகாப்பை மீறும் வகையில் ஆவணங்களை மனுதாரர்கள் பொதுவெளியில் வெளியிட்டுள்ளனர். இது ஆட்சேபத்திற்குரியது. இந்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்கக்கூடாது' என வாதிட்டார். இந்நிலையில், இந்த சீராய்வு மனு குறித்த தீர்ப்பு இன்று உச்ச நீதிமன்றத்தில் வெளியாகவுள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி கே.எம்.ஜோசப் ஆகியோர் இவ்வழக்கிற்கான தீர்ப்பை இன்று வழங்கவுள்ளனர்.