சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வருகிறது.
முன்னதாக இந்த வழக்கு குறித்து தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே, பத்து நாள்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கோடு இஸ்லாமிய, பார்சி பெண்களுக்கு எதிரான மதபாகுபாடு குறித்த விசாரணையும் வருகிறது. 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அனைத்து வயது பெண்களும் கோயிலுக்குச் செல்லலாம் எனத் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் போராட்டங்கள் நடந்தது. இந்தப் போராட்டங்களில் வன்முறை வெடித்தது.
மேலும் தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் வழக்கை ஒன்பது பேர் கொண்ட அரசியல் அமர்வுக்கு மாற்றியமைத்தது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிங்க: பிரஷாந்த் கிஷோருடன் கைகோர்த்த திமுக: அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஸ்டாலின்