தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

போராட்டக்காரர்களை அகற்றக்கோரிய வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் விசாரணை - விவசாயிகள் போரட்டம்

டெல்லி: வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளை அகற்ற சமந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பல்வேறு மனுக்கள் மீதான விசாரணை இன்று (டிசம்பர் 17) நடைபெறுகிறது.

supreme court
supreme court

By

Published : Dec 17, 2020, 2:46 PM IST

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக சாலை முற்றுகை போரட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளால், பயணிகள் சிரமம் அடைந்து வருவதாகவும், அதிகளவிலான கூட்டம் கரோனா பாதிப்பு எண்ணிக்கையை அதிகரிக்க வழிவகுக்கும் என்றும், இதன் காரணமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை உடனடியாக அகற்றுமாறு சமந்தப்பட்ட அலுவலர்களுக்கும், மத்திய அரசிற்கும் அறிவுறுத்தக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பல பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

மூன்று நீதிபதிகள் அமர்வு:

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா மற்றும் வி. ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு, விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர நாடு முழுவதும் உள்ள விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், மத்திய அரசு, மற்ற பங்குதாரர்களை கொண்ட ஒரு குழுவை உருவாக்க உத்தேசித்துள்ளதாக நேற்று (டிசம்பர் 16) தெரிவித்தது.

தேசிய பிரச்னை:

விவசாயிகளின் பிரச்னை விரைவில் ஒரு "தேசிய பிரச்னையாக" மாறும் என்று குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம். எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளின் பிரச்னைகளைத் தீர்க்க மத்திய அரசு, பிற பங்குதாரர்கள், நாடு முழுவதும் உள்ள விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை அமைக்க உத்தேசித்துள்ளதாகக் குறிப்பிட்டது.

மீண்டும் விசாரணை:

இந்நிலையில், மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் எல்லைப் பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை அகற்றுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தக்கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று மீண்டும் விசாரணையைத் தொடங்குகிறது.

புதிதாக இயற்றப்பட்ட விவசாய சட்டங்கள்:

அண்மையில் இயற்றப்பட்ட விவசாய உற்பத்தி வர்த்தக மற்றும் வர்த்தக (ஊக்குவிப்பு மற்றும் வசதி) சட்டம் 2020, விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகள் சட்டம் 2020 மற்றும் அத்தியாவசிய பொருள்கள் (திருத்த) சட்டம் 2020 ஆகியவற்றிக்கு எதிராக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து தொடர் முற்றுகை போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு: ஹேம்நாத்திடம் ஆர்டிஓ விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details