குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாகீன் பாக் பகுதியில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக போராட்டங்கள் நடந்துவருகிறன.
இந்த போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தக்கோரி டெல்லி உச்ச நீதிமன்றத்தில் டாக்டர் நந்த் கிஷோர் கார்க் மற்றும் அமித் சஹானி ஆகியோர் தங்களின் வழக்குரைஞர் ஷாசாந்த் தியோ சூகி வாயிலாக பொதுநல மனுக்களை அளித்தனர்.
ஷாகீன் பாக் போராட்டம்: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை
டெல்லி: ஷாகீன் பாக் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டு பொதுநல மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
இந்த மனுக்கள் மீதான விசாரணை வருகிற திங்கட்கிழமை (பிப்ரவரி 10ஆம் தேதி) நடக்கும் என நீதிபதிகள் கடந்தவாரம் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். இந்த நிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், கே.எம். ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரிக்கின்றனர்.
ஷாகீன் பாக் போராட்டக்குழுவினரால் பொதுமக்கள் கூடும் இடத்தில் அமைதியின்மை நிலவுவதாக பொதுநல மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ஷாகீன் பாக் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் ஆம் ஆத்மி உறுப்பினர் அல்ல: குடும்ப உறுப்பினர்கள் தகவல்