தன்னாட்சி அமைப்புகளின் அதிகாரம் பறிக்கப்பட்டு வருவதாக பல்வேறு தரப்பினர் குற்றச்சாட்டு எழுப்பிவருகின்றனர். இந்நிலையில், நாட்டின் முக்கியமான தன்னாட்சி நிறுவனமாக தேர்தல் ஆணையம் விளங்குகிறது. ஒரு தலைமை தேர்தல் ஆணையர், இரு தேர்தல் ஆணையர் என மூவர்தான் இதன் தலைமை பொறுப்பிலிருந்து வருகிறார்கள். பிரதமர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கொண்ட கொலிஜியம் அமைப்பு இவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்துவந்தனர்.
இந்த கோரிக்கையை பொதுநல வழக்காக பாஜக மூத்தத் தலைவரும் வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாயா உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளார். இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டது.