மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற இருக்கிறது. ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கும் தேர்தல் மே 19-ம் தேதி முடிவடைகிறது. இத்தேர்தலுக்காக 10 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன், யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் உறுதி செய்து கொள்ளும் ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களும் பயன்படுத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
50% ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை; உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை - மக்களவைத் தேர்தல்
டெல்லி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 50% அளவுக்கு பதிவாகும் வாக்குகளையும், வாக்கு ஒப்புகைச் சீட்டுகளையும் ஒப்பிட்டு பார்க்க உத்தரவிட வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.
மேலும், இந்த ஒப்புகைச் சீட்டை மாதிரிக்கு ஒரு தொகுதியில் ஏதேனும் ஒரு வாக்குச்சாவடியில் மட்டும் சரிபார்த்துக் கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் இந்த விதிமுறைக்கு எதிராக 21 கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரெய்ன் உள்ளிட்ட 21 கட்சிகளின் தலைவர்கள் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அதில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 50% அளவுக்கு பதிவாகும் வாக்குகளையும், வாக்கு ஒப்புகைச் சீட்டுகளையும் ஒப்பிட்டு பார்க்க உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. அந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.