தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

டெல்லி: உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்யக்கோரி திமுக கூட்டணி கட்சிகள் தொடர்ந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

SC to hear on Today DMK's plea alleging quota given in TN local body polls
SC to hear on Today DMK's plea alleging quota given in TN local body polls

By

Published : Dec 11, 2019, 8:15 AM IST

ஊரக உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்யக் கோரி திமுக-வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளனர். திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் மனுவை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் '1995ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சி விதிகளின்படி அனைத்து நிலைகளிலும் விகிதாச்சார இட ஒதுக்கீட்டை அமல்படுத்திய பின்பு உள்ளாட்சி தேர்தலுக்கான புதிய அறிவிப்பை வெளியிட வேண்டும்' என குறிப்பிட்டுள்ளனர்.

முன்னதான வழக்கில் பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் மறுவரையறை செய்யவில்லை என்று திமுக வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் பிரிக்கப்பட்ட மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தேர்தலை நடத்தலாம் என தெரிவித்திருந்தது.

இதனையடுத்து உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த 7ஆம் தேதி தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் புதிதாக ஒரு அறிவிப்பாணை வெளியிட்டது. அதில் பிரிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதற்கு எதிரான வழக்கு - உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது!

ABOUT THE AUTHOR

...view details