தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தடுப்புக் காவலில் உமர் அப்துல்லா - உச்ச நீதிமன்றத்தில் விசாரணை!

டெல்லி: ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லாவைப் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்திருப்பதை எதிர்த்து, அவரது தங்கை சாரா தொடுத்த மனுவை வரும் மார்ச் 5 ஆம் தேதி விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் எடுக்கவுள்ளது.

By

Published : Mar 2, 2020, 10:26 PM IST

v
உமர் அப்துல்லாவின் தடுப்புக் காவல் வழக்கை விசாரிக்கவிருக்கும் உச்ச நீதிமன்றம்!

உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வின் முன்பு, கடந்த வாரம் இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, இது தொடர்பாக பிரமாணப் பத்திரத்தை ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் தாக்கல் செய்துள்ளதாக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தகவல் தெரிவித்தார்.


தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் அரசியல் கட்சி தலைவர்கள்.

அப்போது அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், ‘தடுப்புக்காவல் விஷயங்களில் ஒருவர் முதலில் உயர் நீதிமன்றத்தை தான் அணுக வேண்டும். பின்னர் தான் உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும். ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தை அணுகாததற்கு எவ்வித காரணமும் காட்டப்படவில்லை’ என்று குறிப்பிட்டார்.

பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், தனது தாயை தடுத்து வைத்திருப்பதை எதிர்த்து முன்னாள் முதலமைச்சர் மெஹபூபா முப்தியின் மகள் இல்டிஜா இக்பால் முப்தி, மற்றொரு மனு தாக்கல் செய்திருக்கும் நிலையில் இந்த இரண்டு வழக்குகளும் ஒன்றாக விசாரிக்கப்பட வேண்டும் என்று நீதிபதி அருண் மிஸ்ரா என்று கூறினார்.

இந்நிலையில், இல்டிஜாவின் மனு மார்ச் 18 ஆம் தேதியன்றும், சாராவின் மனு மார்ச் 5 ஆம் தேதியன்றும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என நீதிமன்ற வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு-காஷ்மீரின் சிறப்புச் சட்டங்கள் 370 & 35ஏ நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, ஜம்மு-காஷ்மீரின் மக்கள் தலைவர்கள் பலர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் 2020 பிப்ரவரி 5 ஆம் தேதி, அத்தலைவர்களுக்கு எதிராக பொதுப் பாதுகாப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி தடுப்புக்காவலை நீட்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கிரண் பேடி மீது மோடியிடம் புகார் - அமைச்சர் ஆவேசம்!

ABOUT THE AUTHOR

...view details