தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிகார் மூளைக் காய்ச்சல்; உச்ச நீதிமன்றம் விசாரணை

டெல்லி: பிகாரில் பரவிவரும் மூளைக் காய்ச்சல் குறித்து உச்ச நீதிமன்றம் ஜூன் 24ஆம் தேதி விசாரிக்க உள்ளது.

Supreme court

By

Published : Jun 19, 2019, 7:22 PM IST

பிகார் மாநிலம் முசாஃபர்நகர் மாவட்டத்தில் அக்கியுட் என்சிபாலிட்டிஸ் சிண்ரோம் (Acute Encephalitis Syndrome) எனப்படும் மூளைக் காய்ச்சல் பரவிவருகிறது. இந்தக் காய்ச்சலில் பாதிக்கப்பட்டு இதுவரை 112 பேர் உயிரிழந்துள்ளதாக பிகார் அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் வழக்கறிஞர் மனோகர் பிரதாப் என்பவர் மூளைக் காய்ச்சல் விவகாரத்தை உடனடியாக விசாரிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தொடர்ந்தார்.

இந்த வழக்கை நீதிபதி தீபக் குப்தா, சூர்யா காந்த் கொண்ட அவரம் இன்று விசாரணைக்கு எடுத்தது. வழக்கறிஞர்கள் மனோகர் பிரதாப், சன்பிரித் சிங் அஜ்மணி ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், "அனைத்து தனியார் மருத்துவமனைகளும் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க பிகார் அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

பிகார் அரசின் மெத்தனப்போக்கால் கட்டுப்படுத்தக் கூடிய மூளைக் காய்ச்சல் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிரை பறித்துள்ளது. மருத்துவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் பிகார் மாநிலத்தில் மொத்தம் 126 குழந்தைகள் உயிரிந்துள்ளனர். உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் வழங்க வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து வழக்கின் விசாரணை ஜூன் 24ஆம் தேதி தொடங்கும் என நீதிபதிகள் அறிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details