தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நிர்பயா வழக்கு குற்றவாளி உச்ச நீதிமன்றத்தில் மனு! - நிர்பயா வழக்கு குற்றவாளி உச்ச நீதிமன்றத்தில் மனு

டெல்லி: குற்றம் நடைபெறும்போது தான் சிறுவனாக இருந்த காரணத்தால் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான பவன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

SC
SC

By

Published : Jan 20, 2020, 11:39 AM IST

நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் குப்தா உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், குற்றம் நடைபெறும்போது தான் சிறுவனாக இருந்த காரணத்தால் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் இவர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இவர் மனுதாக்கல் செய்துள்ளார்.

பானுமதி, அசோக் பூஷன், ஏ.எஸ். போபண்ணா கொண்ட அமர்வு இந்த மனுவை விசாரிக்கவுள்ளது. பிப்ரவரி 1ஆம் தேதி மேற்கொள்ளவுள்ள தூக்குதண்டனையை நிறுத்திவைக்கக் கோரியும் அவர் மனு தாக்கல் செய்துள்ளார். மற்றொரு குற்றவாளியான முகேஷின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்திருந்தார். மற்ற மூன்று குற்றவாளிகளும் கருணை மனுவை தாக்கல் செய்யவில்லை.

நிர்பயா வழக்கு குற்றவாளிகளான வினய், முகேஷ் ஆகியோரின் மறு சீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அதிவேகமாக வந்த தனியார் சொகுசுப் பேருந்து மோதி 4 பேர் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details