தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நிர்பயா வழக்கு - குற்றவாளியின் மறுசீராய்வு மனு திங்களன்று விசாரணை! - Nirbhaya gangrape case

டெல்லி: நிர்பயா வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பவன் குமார் தாக்கல் செய்த மறுசீராய்வு மனு, திங்கள்கிழமை விசாரணைக்குவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Nirbhaya case convict Pawan Gupta
Nirbhaya case convict Pawan Gupta

By

Published : Feb 29, 2020, 7:05 PM IST

ஓடும் பேருந்தில் 2012ஆம் ஆண்டு, நிர்பயா என்ற மருத்துவக் கல்லூரி மாணவி கொடூரமாக கூட்டுப்பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டு, பேருந்திலிருந்து தூக்கி வீசப்பட்டார். அதைத்தொடர்ந்து, சிகிச்சைக்காக அவர் சிங்கப்பூர் அழைத்துச் செல்லப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனிற்றி அவர் மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.

இதில் முகேஷ் குமார் சிங், பவன் குப்தா, வினய் குமார் சர்மா, அக்சய் ஆகிய நால்வரையும் குற்றவாளிகளாக அறிவித்த நீதிமன்றம், அவர்களுக்கு தூக்குத் தண்டனை விதித்தது. தூக்குத் தண்டனையை தள்ளிப்போடும் நோக்கில், ஒருவர் பின் ஒருவராக தொடர்ந்து மறுசீராய்வு மனுக்களையும் கருணை மனுக்களையும் தாக்கல் செய்துவருகின்றனர்.

இந்நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தா, நேற்று உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுவைத் தாக்கல் செய்தார். பவன் குப்தா தாக்கல் செய்துள்ள இந்த மனு, வரும் திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

என்.வி. ரமனா தலைமையில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, ஆர்.எஃப். நரிமன், ஆர். பானுமதி, அசோக் பூஷண் ஆகிய ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அமர்வு, இந்த மனுவை விசாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, மார்ச் 3ஆம் தேதி குற்றவாளிகள் தூக்கிலிடப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நிர்பயா வழக்கு - குற்றவாளிகளில் ஒருவர் மீண்டும் கருணை மனு!

ABOUT THE AUTHOR

...view details