ராம சேது பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஏ. நஸீர், சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது இந்த வழக்கை மூன்று மாதங்கள் கழித்து விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அவர்கள் தெரிவித்தனர்.
சுப்பிரமணியன் சுவாமி தனது மனுவில், 'ராம சேது பாலம் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான சுண்ணாம்பு சங்கிலி. இது ராவணனால் கடத்தப்பட்ட சீதையை மீட்க ராம சேதுவால் கட்டப்பட்டது' உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அளித்திருந்தார்.