சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் ஒரே மாதிரியான காகிதங்களை பயன்படுத்துதல் ஆகியவற்றை ஊக்குவிக்கும் விதமாக இந்த நடைமுறை ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இது குறித்து உச்ச நீதிமன்ற பொதுச்செயலாளர் எஸ். சஞ்சீவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
நிர்வாகத்தில் ஒரே அளவிலான காகிதங்களை பயன்படுத்துவது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஒரே மாதிரியான ஏ4 காகிதத்தில் மட்டுமே உச்ச நீதிமன்றத்தில் மனு அளிக்க வேண்டும்.
அந்த காகிதம் மிக தெளிவாக இருக்க வேண்டும். இந்த வகையான மனுக்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். இந்த வகை காகிதங்களை இரு பக்கமும் பயன்படுத்திக்கொள்ளலாம். வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் இது பற்றி தகவல்கள் வழக்குரைஞர்களுக்கு குறுந்தகவல் மூலம் தெரிவிக்கப்படும்.