டெல்லி:கரோனா பொதுமுடக்கம் (lockdown) காரணமாக வழக்குரைகள் நிதி நெருக்கடியால் தவித்துவருகின்றனர். இந்நிலையில், அவர்களுக்கு வட்டியில்லாமல் ரூ.3 லட்சம் வரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய பார் கவுன்சில் சார்பில் பொதுநல வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கரோனா பொதுமுடக்கம் காரணமாக வழக்குரைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளது தொடர்பான தனது கவலையை வெளிப்படுத்திய தலைமை நீதிபதி, அகில இந்திய பார் கவுன்சில், மாநில பார் கவுன்சில், அனைத்து உயர் நீதிமன்ற பொது பதிவாளர் இரண்டு வாரத்துக்குள் பதிலளிக்க நோட்டீஸ் அளித்து உத்தரவிட்டார்.