டெல்லி:புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு எதிரான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், புதிய கட்டடம் கட்டும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
டெல்லியில் அமையவுள்ள நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தின் கட்டுமான பணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வரும் 10ஆம் தேதி அடிக்கல் நாட்டவுள்ளார். முன்னதாக புதிய கட்டடம் கட்டும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டன. இதனை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கான்வில்கர், தினேஷ் மகேஸ்வரி, சஞ்சீவ் கன்னா அடங்கிய அமர்வு இன்று (டிசம்பர் 7) விசாரணை செய்தது.
அப்போது, வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் கட்டுமான பணிகளுக்கான நடவடிக்கையை மேற்கொண்டுவரும் மத்திய அரசின் செயல் அதிருப்தி அளிப்பதாக, நீதிபதிகள் தெரிவித்தனர்.