தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஹோலி விடுமுறையை சமாளிக்க உச்ச நீதிமன்றம் புது முடிவு - உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ பாப்டே

டெல்லி: ஹோலி விடுமுறை காலத்தில் வரும் அவசர வழக்குகளை விசாரிக்க இரண்டு அவசர கால அமர்வை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே நியமித்துள்ளார்.

SC
SC

By

Published : Mar 8, 2020, 11:51 AM IST

நாடு முழுவதும் ஹோலிப் பண்டிகைக் கொண்டாடப்படுவுள்ள நிலையில், உச்ச நீதிமன்றதுக்கு ஹோலி விடுமுறை நாள்கள் வரும் மார்ச் 9ஆம் தேதி முதல் மார்ச் 12ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை காலத்தில்வரும் முக்கிய வழக்குகளை விசாரிக்க உச்ச நீதிமன்றம் அவசரகால அவசர அமர்வுகள் நியமிக்கப்பட்டுள்ளன.

இதற்கான சுற்றிக்கை நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஹோலி விடுமுறை நாள்களில் விசாரிக்க இரண்டு அவசர கால அமர்வுகளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே நியமித்துள்ளார். அதன்படி நீதிபதி அஷோக் பூஷண், சூரிய காந்த் ஆகியோர் கொண்ட அமர்வு ஒன்றும், நீதிபதி யு.யு. லலித், நீதிபதி அனிருத்தா போஸ் ஆகியோர் கொண்ட மற்றொரு அமர்வு வரும் மார்ச் 9ஆம் தேதி முதல் மார்ச் 12ஆம் தேதிவரை அவசர வழக்குகளை விசாரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:யெஸ் வங்கி நிறுவனர் ரானா கப்பூர் கைது

ABOUT THE AUTHOR

...view details