பிஹ்தா வர்த்தகர்கள் சங்க தலைவரும், "உதய் சித்ரா மந்திர்" சினிமா மண்டபத்தின் உரிமையாளருமான நிர்பாய் சிங், 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் தேதியன்று அமித் குமார் உள்பட மூன்று நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். நிர்பாய் சிங்கின் சகோதரர் அஜய் குமார் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
கொலை குற்றவாளிக்கு வழங்கிய பிணை உத்தரவை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்! - கொலை குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கிய பாட்னா நீதிமன்றம்
டெல்லி: பிஹ்தா வர்த்தகர்கள் சங்க தலைவர் நிர்பாய் சிங் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளிக்கு பாட்னா உயர் நீதிமன்றம் வழங்கிய பிணை உத்தரவை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

அந்த மனுவில், "சகோதரன் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான அமித் குமாருக்கு பாட்னா நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. அந்த நீதிபதி அமித்தை முதன்மை குற்றவாளியாக கருதாமல் மார்ச் 28, 2018 தேதியன்று பிணை வழங்கி உத்தரவிட்டார். எனவே, பல கொலை சம்பவங்களில் தொடர்புடைய அமித்தின் பிணையை தள்ளுபடி செய்ய வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை காணொலி மூலம் நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பிணையில் வெளிவந்த அமித், கொலை சம்பவத்தின் முதன்மை குற்றாவாளி என்றும், அவர் பல குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாகவும் அஜய் குமாரின் வழக்கறிஞர் நீதிபதியிடம் எடுத்துரைத்தார். மனுதாரரின் மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கின் முக்கிய குற்றவாளியை விடுவிப்பது ஏற்றுக்கொள்ளப்படாது. எனவே, அமீத்தின் பிணை மனு ஒத்திவைக்கப்படுகிறது என்று தீர்ப்பளித்தார்.