உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள முக்கிய வழக்குகளின் விசாரணை கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைக்கு பிறகு ஜனவரி 4ஆம் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பல்வேறு அமர்வுகளுக்கு ஒதுக்கப்பட்ட வழக்குகளின் பட்டியலை நீதிமன்றம் இந்த வாரம் வெளியிட்டிருந்தது. புதிதாக நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிவரும் விவசாயிகள் தொடர்பான வழக்கும் நிலுவையில் உள்ளது.
வேளாண் சட்டம் தொடர்பான வழக்குகள்
நவம்பர் மாத இறுதியிலிருந்து, டெல்லியின் எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் தொடர் போராட்டத்தை மேற்கொண்டுவருகின்றனர். சட்டத்தை நீக்குவது தொடர்பான மனுக்களும் போராட்ட களத்திலிருந்து விவசாயிகளை அகற்றுவது தொடர்பான வழக்குகளும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. விவசாய சங்க பிரதிநிதிகளிடம் சுமூக பேச்சுவார்த்தை மேற்கொள்ள மத்தியஸ்தர் ஆணையத்தை அமைக்கும்படி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே அரசு தரப்பை கேட்டுக்கொண்டார்.