தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

விமான பயணம் ரத்து: கட்டணத்தை திருப்பிச் செலுத்த நடவடிக்கை எடுக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு - business news in tamil

ஊரடங்கு காலத்தில் ரத்து செய்யப்பட்ட விமான பயணச்சீட்டுக் கட்டணத்தை பயணிகளுக்கு முழுமையாக திரும்ப வழங்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று (ஜூன் 12) விசாரணைக்கு வந்தது. அப்போது ரத்து செய்யப்பட்ட பயணச்சீட்டு கட்டணம் திரும்ப வழங்கப்பட வேண்டும் என நீதிபதி துஷார் மேத்தா தெரிவித்தார்.

air ticket refund
air ticket refund

By

Published : Jun 12, 2020, 8:07 PM IST

டெல்லி: கரோனா காலங்களில் ரத்தான விமானங்களில் பயணச்சீட்டு எடுத்திருந்த பயணிகளுக்கு கட்டணத்தை திரும்பச் செலுத்த நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, ஊரடங்கால் விமான நிறுவனங்கள் கடும் இழப்பைச் சந்தித்திருப்பதாகவும், முழுமையாக டிக்கெட் தொகையை வழங்குவதற்கு நிர்பந்திக்கக் கூடாது என்றும் கோரிக்கை விடுத்தார்.

வைப்புத் தொகைக்கு வட்டி குறைகிறதா?

பதிவு செய்த விமான பயணச் சீட்டுக்கான கட்டணத்தை திரும்ப அளிக்கும் நடைமுறை உலகில் எங்கும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக விமான போக்குவரத்து துறை அமைச்சருடன் விவாதித்து தீர்வை எட்ட விரும்புவதாகவும் அவர் கூறினார். இதையடுத்து இந்த வழக்கில் விமான போக்குவரத்து அமைச்சகம் மூன்று வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அத்துடன், விமான கட்டணத்தை திருப்பி வழங்கும் விவகாரத்தில் மத்திய அரசு ஒரு தீர்க்கமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்றும், மத்திய அரசும், விமான நிறுவனங்களும் கலந்து பேசி, பயணிகளின் டிக்கெட் பணத்தைத் திரும்பப் வழங்குவதற்கான வழிமுறைகளை வகுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையையும் மூன்று வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details