கரோனா வைரஸ் காரணமாக அங்கன்வாடிகள், சத்துணவுக் கூடங்கள் மூடப்பட்டுள்ளன. ஏழை மாணவர்கள் இதன் விளைவாக சத்துணவு குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உணவின்றித்தவிக்கும் ஏழை மாணவர்கள்: மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு! - மத்திய அரசு
டெல்லி: ஊரடங்கினால் மூடப்பட்ட சத்துணவுக் கூடங்களால் பெரும்பாலான ஏழை மாணவர்கள் உணவின்றித் தவிக்கின்றனர் என வழக்குத் தொடரப்பட்ட நிலையில், இது குறித்து மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
![உணவின்றித்தவிக்கும் ஏழை மாணவர்கள்: மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு! mid-day meals](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9345637-992-9345637-1603900433561.jpg)
mid-day meals
இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம், இதுகுறித்த பிரமாணப் பத்திரத்தை மத்திய அரசு இரண்டு வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. முன்னதாக, மார்ச் மாதம், அங்கன்வாடிகள், சத்துணவுக் கூடங்கள் மூடப்பட்டது குறித்து உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
ஏழை, எளிய மாணவர்களைப் பயிற்றுவிக்கும் நோக்கிலும் அவர்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் சத்துணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.