கரோனா கொள்ளை நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நாடு முழுவதும் வரும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு காலத்தில் வேலைக்குச் செல்ல முடியாத ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்தது ஊழியர்களுக்கும் அந்தந்த நிறுவனங்கள் முழு ஊதியம் வழங்க வேண்டும் என உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், இந்த உத்தரவுக்கு எதிராகப் பல நிறுவனங்கள், அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளன. இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது.
அவற்றை ஒரே வழக்காக விசாரித்த நீதிபதிகள் என்.வி.நரிமன், சன்ஜெய் கிஷான் கவுல், பி.ஆர். கார்வி அமர்வு ஊழியர்களுக்கு முழு ஊழியம் வழங்கப்படுவதை உறுதி செய்ய மத்திய அரசு என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்பதை இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும்" என உத்தரவிட்டது.
இதையும் படிங்க : 'கரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு ரூ. 1000 கோடி வழங்குக' : பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை