மேற்கு வங்கத்தின் பூர்பா பர்தாமன் பகுதியில் வசிக்கும் இஸ்ரருல் ஹோக் மொண்டால் உட்பட 20 பேர் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
அதில், தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம், அடிப்படை உரிமைகளை உறுதிசெய்யும் 14,19,21 ஆகிய சட்டப் பிரிவுகளுக்கு எதிராகவுள்ளதாக கூறப்பட்டிருந்தது. மேலும், குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை, அரசியலமைப்பை மீறும் வகையில் உள்ளதாகவும், இச்சட்டம் நாட்டின் அடிப்படையான மதச்சார்பின்மை, சமத்துவம் ஆகியவற்றை குலைக்கும் வகையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.