தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா சிகிச்சைக்கு இந்த மருந்துகளுக்கு ஒப்புதல் வழங்காதது ஏன்? - உச்ச நீதிமன்றம் கேள்வி - ரெம்டிசிவிர்

டெல்லி : ஃபேவிபிராவிர், ரெம்டிசிவிர் போன்ற மருந்துகளை கரோனா சிகிச்சைக்கு உட்படுத்த ஒப்புதல் அளிக்காதது ஏன் என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

SC seeks Centre's reply
SC seeks Centre's reply

By

Published : Oct 29, 2020, 2:43 PM IST

நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 80 லட்சத்தைத் தாண்டியுள்ளது. கரோனா தடுப்பு மருந்து இன்னும் இந்தியாவில் புழக்கத்திற்கு வரவில்லை என்பதால் ரெம்டிசிவிர் போன்ற தடுப்பு மருந்துகள் பரிசோதனை முயற்சியில் பயன்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில், மத்திய அரசின் அனுமதியின்றி ஃபேவிபிராவிர், ரெம்டிசிவிர் போன்ற மருந்துகளை இந்தியாவில் உள்ள நான்கு மருந்து நிறுவனங்களுக்கு கரோனா சிகிச்சைக்காக உற்பத்தி செய்து, விற்பதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.எல்.ஷர்மா, "இந்த மருந்துகள் கரோனா சிகிச்சைக்கு எவ்வித பலன்களையும் அளிப்பதில்லை என்று கடந்த அக்டோபர் 15ஆம் தேதி உலக சுகாதார அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது" என்றார்.

இதையடுத்து, ஃபேவிபிராவிர், ரெம்டிசிவிர் போன்ற மருந்துகளை கரோனா சிகிச்சைக்கு உட்படுத்த ஒப்புதல் அளிக்காதது ஏன் என்பது குறித்து மத்திய அரசு விளக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. மேலும், இந்தப் பிரச்னை தொடர்பாக மத்திய அரசுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த சம்மன் அனுப்பப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாடு பிற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது - ஹர்ஷ் வர்தன் பாராட்டு

ABOUT THE AUTHOR

...view details