தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உத்தரகண்ட் தலைநகராக கெய்சைனை அறிவிக்க கோரிய மனு தள்ளுபடி

டெல்லி: உத்தரகண்ட் மாநிலத்தின் தலைநகராக கெய்சைன் என்ற பகுதியை அறிவிக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

Uttarakhand  Supreme Court  Trivendra Singh Rawat  உத்தரகண்ட்  உத்தரகண்ட் தலைநகர் விவகாரம்  கெய்சைன்  உச்ச நீதிமன்றம்  பிரதாப் நகர்
Uttarakhand Supreme Court Trivendra Singh Rawat உத்தரகண்ட் உத்தரகண்ட் தலைநகர் விவகாரம் கெய்சைன் உச்ச நீதிமன்றம் பிரதாப் நகர்

By

Published : Jun 3, 2020, 4:28 AM IST

உத்தரகண்ட் மாநில முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் மாநில சட்டமன்றத்தில் சாமோலி மாவட்டத்தில் உள்ள கெய்செய்ன் மலை மாநிலத்தின் கோடைகால தலைநகராக இருக்கும் என்று மார்ச் மாதம் அறிவித்தார்.

இந்த நிலையில் கெய்சைனை மாநிலத்தின் தலைநகராக அறிவிக்க உத்தரகண்ட் அரசுக்கு உத்தரவிட வேண்டும் என டெஹ்ராடூனை சேர்ந்த ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர். பானுமதி தலைமையிலான அமர்வு வீடியோ கான்பரன்ஸின் வாயிலாக விசாரணை நடத்தியது. அப்போது மனுதாரர், “உத்தரகண்ட் மாநிலத்தின் தலைநகராக கெய்சைனையும், 'பிரதாப் நகரை' புதிய மாவட்டமாக அறிவிக்க மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், “மாநில அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிடாது” என்றும் கருத்து தெரிவித்தனர். இந்தாண்டு மார்ச் மாதம், மாநில சட்டசபையில் தனது பட்ஜெட் உரையை முடித்த உடனேயே, கெய்சைன் கோடைகால தலைநகராக இருக்கும் என்று ராவத் அறிவித்திருந்தார்.

இது மலையக மக்களின் நீண்டகால கோரிக்கையை ஓரளவு பூர்த்திசெய்யும் வகையிலும், உணர்ச்சிவச அரசியல் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகவும் இருந்தது. உத்தரகண்ட் மாநிலம் நவம்பர் 9, 2000 அன்று இந்திய மாநிலமாக மாறியது நினைவுக் கூரத்தக்கது.

இதையும் படிங்க: மின்சார திருத்த மசோதாவுக்கு கே.சி.ஆர். எதிர்ப்பு!

ABOUT THE AUTHOR

...view details